Five years and fifty years
Najimudeen M.L.A.M.
We entered the faculty of medicine university of Colombo on 19.04.1974. Most of the students had their early education either in Sinhala or Tamil medium with very little knowledge of English language. The medical course was entirely in English medium. A strenuous new field of study in a new language is a very difficult task, but the students managed to learn very quickly mainly due the support of dedicated teachers and the hard work of students.
In the year 1974, there were global shortage of the food ,oil crisis and heavy inflation. This has affected Sri Lanka very badly There were not enough foreign reserve in the country and shortage of rice production. We had no rice for two days in a week and our lunch was manioc .
Most of the boys were living at the Bloemfontein hostel and the female students were residing at De Saram place hostel. The monthly hostel fee was Rs.130.00 An average lunch at outside restaurants would cost Rs. 2.50
On the 12th of August 1977, there were rumours that the Sinhala students were killed in Jaffna. This made a chaos in the university and lead to a very frightening situation. The university of Colombo was closed for 2 months
The parliamentary election was on 21.07.1977. Subsequently J. R. Jayewardene was sworn in as the first Executive President of Sri Lanka on 4th February 1978. Open economy policy was introduced. The 3rd constitution of Sri Lanka was introduced on 3rd of August 1978 (The 1st constitution was in 1948 and the 2nd was on 1972). All these have disrupted the academic program of the medical faculty.
On November 23, 1978, The cyclone had devastating impacts in Sri Lanka, killing about 915 people. An estimated more than one million people were affected, with over 250,000 buildings damaged. Our medical students had travelled as far as Batticaloa and looked after the injured patients.
We had evolved as doctors in the year 1979. Most of us had served the nations for nearly 50 years. Some of the our batchmates had passed away.
There were shortcoming and sad events but at the end we had smooth sailing. The five years of Colombo medical faculty is the land mark in our 50 years of medical career
ஐந்து ஆண்டுகளும் ஐம்பது ஆண்டுகளும்
நஜிமுதீன் எம்.எல்.ஏ.எம்.
19.04.1974 அன்று நாங்கள் கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களாகக் காலடி எடுத்து வைத்தோம். பெரும்பாலான மாணவர்கள் சிங்கள மொழி மூலமாகவும் தமிழ் மூலமாகவும் கல்வி கற்றவர்கள். அவர்களின் ஆங்கில மொழி அறிவு குறைவானது. மிகவும் கஷ்டமான மருத்துவத் துறையைத் தெரியாத ஆங்கில மொழியில் கற்பது என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. ஆனால் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களின் துணையாலும் மாணவர்களின் கடின உழைப்பாலும் இந்த வேலை இலகுவாக அமைந்தது.
1974 ஆம் ஆண்டில் உலகெங்கணும் பாரிய உணவுத் தட்டுப்பாடு, எரிபொருள் பற்றாக்குறை, பண வீக்கம் என்பன ஏற்பட்டன. இது இலங்கையையும் பெருமளவில் பாதித்தது. இலங்கையில் போதிய அந்நியச் செலாவணி இருக்கவில்லை. கணிசமான நெல் உற்பத்தி இடம்பெறவில்லை. இதனால் வாரத்திற்கு இரண்டு நாட்கள் சோறு சமைக்க முடியாத நிலை. எங்களுக்கு மரவள்ளிக் கிழங்குதான் பகல் உணவு.
பெரும்பாலான ஆண் மாணவர்கள் Bloemfontein விடுதியிலும் மாணவிகள் De Saram place விடுதியிலும் தங்கினார்கள். அப்போது மாதாந்த விடுதிக் கட்டணம் 130.00 ரூபாய் ஆகும். சாதரணமான உணவகங்களில் பகல் உணவு 2.50 ரூபாய் ஆகும்
12.08.1977 அன்று யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களைத் தமிழ் மாணவர்கள் கொன்று விட்டதாகப் பொய்யான வதந்தி ஒன்று காட்டுத் தீயாகக் கொழும்பில் பரவியது. இது பல்கலைக் கழகத்தில் பெரிய கலவரத்திற்கு வழி வகுத்தது. இதனால் கொழும்புப் பல்கலைக் கழகமும் அதனுடன் இணைந்த மருத்துவ பீடமும் இரண்டு மாத காலம் மூடப்பட்டது.
21.07.1977 அன்று நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றது. அதன் பின்னர் 4.02.1978 அன்று ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்கள் இலங்கையின் முதலாவது சர்வ அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகமானது. மூன்றாவது முறையாக அரசியல் அமைப்புத் திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டது. (முதலாவது அரசியல் அமைப்பு 1948 ஆம் ஆண்டிலும் இரண்டாம் திருத்தம் 1972 ஆம் ஆண்டிலும் இடம் பெற்றன) இவைகளால் மருத்துவக் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
23.11.1978 அன்று இலங்கையில் பாரிய சூறாவளி அனர்த்தம் ஏற்பட்டது. 915 பேர் இறந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் காயமுற்றனர். எமது மருத்துவ மாணவர்கள் மட்டக்களப்பு போன்ற தூர இடங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று காயம் உற்றோருக்குச் சிகிச்சை வழங்கினர்.
எல்லாவற்றையும் தாண்டி 1979 ஆண்டு மருத்துவர்களாக வெளியேறினோம். எங்களில் அதிகமானோர் இலங்கையிலும் வெளி நாட்டிலும் ஐம்பது ஆண்டுகளாக மருத்துவச் சேவை ஆற்றி வருகின்றனர்.துரதிஷ்டவசமாகப் பலர் இறந்து விட்டனர்.
இந்த ஐந்து வருட வாழ்வில் பல துயரங்கள், ஏமாற்றங்கள் பின்னடைவுகள் நிகழ்ந்தாலும் எங்களுடைய ஐம்பது வருட வைத்திய வாழ்வில் இந்த ஐந்து வருடங்கள் பசுமையானவை. மறக்க முடியாதவை.